இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி RM 91,060 பறிகொடுத்த முதியவர்.
- Shan Siva
- 11 Sep, 2024
கோல திரெங்கானு, செப் 11: இல்லாத முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி 91,060 வெள்ளியை
ஓய்வூதியம் பெறும் நபர் ஒருவர் இழந்தார்.
சம்பந்தப்பட்ட 85 வயது முதியவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி தெரியாத
எண்ணில் இருந்து WhatsApp மூலம் விளம்பரம்
வந்ததை அடுத்து, குறுகிய காலத்தில் அதிக
லாபத்துடன் கூடிய 'Madinah Emas'
முதலீட்டுத்
திட்டத்தை அந்த விளம்பரம் அவருக்கு அறிமுகப்படுத்தியது.
RM500 ஆரம்ப
முதலீட்டில் விஐபி பேக்கேஜ் வழங்கப்பட்டது. நான்கு மணி
நேரத்திற்குள் RM15,800 திரும்ப
வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.
இதனை அடுத்து, விரைவான லாபம் என்ற வாக்குறுதியால் கண்மூடித்தனமாக, ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 26 முறை
பணத்தை மாற்றியுள்ளார் அம்முதியவர்.
பரிவர்த்தனைகளை முடித்துவிட்டு,
வாக்குறுதியளிக்கப்பட்ட
வருமானத்திற்காக காத்திருந்த போதிலும்,
நிதி
எதுவும் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர் ஏமாற்றமடைந்தார். இதனை அடுத்து அவர் போலீஸில்
புகாரளித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு
வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *