350 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! பெற்றோர்களை எச்சரித்த காவல் துறை!

top-news

நேற்றிரவு கோலா பெர்லீசில் நடத்தப்பட்ட சோதனையில் 350 மோட்டார் சைக்கிள்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்ததாகக் கோலா பெர்லிஸ் மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

5 சென் காசின் அளவை விடவும் குறுகிய பதிவு எண்களைக் கொண்ட அட்டையைப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கடுமையாக எச்சரித்ததுடன் அவர்களின் பெற்றோர்களை அழைத்தும் எச்சரித்ததாக Yusharifuddin தெரிவித்தார்.  போக்குவரத்துக் கண்காணிப்புக் கேமிராவிலிருந்து தப்பிக்க இம்மாதிரி சிறிய அளவிலான எண் பதாகைகளைப் பயன்படுத்துவதாக Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததும் விசாரணையில் தெரிய வந்ததாகவும் 13 வயதினர்களும் சட்டவிரோதப் பந்தயங்களில் ஈடுபடுவதாக Yusharifuddin தெரிவித்தார்.

Polis Kangar mengesan pelbagai kesalahan motosikal dalam operasi di Kuala Perlis, termasuk penggunaan nombor plat lebih kecil daripada saiz duit syiling 5 sen, motosikal diubahsuai, dan remaja tanpa lesen. 350 motosikal dirampas, ibu bapa turut diberi amaran

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *