கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 MPox சம்பவங்கள் நாட்டில் பதிவு! - சுகாதார அமைச்சு தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 16: மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில்  குரங்கம்மை எனப்படும் எம் பாக்ஸ் 10 பேருக்குப் பாதிக்கப்பட்டதாக  சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒன்பது சம்பவங்கள் பதிவாகின.  இந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது  என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுவரை mpox காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அதே நேரத்தில் மற்ற நாடுகளிலும் நமது அண்டை நாடுகளிலும் நோய் தொடர்பான அண்மைய  முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

இந்நோய்க்கான அறிகுறிகள் பொதுவாக லேசானவை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் தாங்களாகவே குணமடையலாம் என்றும் அவர் கூறினார்.

நோய்த்தொற்று கடுமையாக இருந்தால் மட்டுமே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தெகோவிரிமாட் வைரஸ் தடுப்பு சிகிச்சை அல்லது எம்விஏ-பிஎன் தடுப்பூசியை வழங்க அதிகாரிகள் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நல்ல சுகாதாரத்தைப் பேணுதல், அறிகுறியுள்ள நபர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் அறிகுறிகள் தோன்றினால் உடனடி மருத்துவ உதவியை நாடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை Dzulkefly வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *