சீனாவில் தொழில்துறை தலைவர்களுடன் அன்வார் வட்ட மேசை!

top-news
FREE WEBSITE AD

ஷாங்காய், நவம்பர் 6: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சீனாவின் ஷாங்காய் நகருக்கு தனது உத்தியோகப்பூர்வ பயணத்தின் மூன்றாவது நாள் பயணத்தைத் தொடங்குகிறார். கசானா நேஷனல் நிறுவனம் ஏற்பாடு செய்த சீன முதலீட்டாளர்களுடனான உரையாடல் அமர்வில் அவர் பங்கேற்கிறார்.

ஷாங்காயில், அன்வார் பல நிறுவனங்களைச் சந்தித்து 23 'தொழில்துறை தலைவர்களுடன்' ஒரு வட்ட மேசை அமர்வை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான்; முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ்; மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

ஷாங்காயில் நடைபெறும் 7வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (7வது CIIE) கலந்துகொள்வதற்காக, பிரதமர் லி கியாங்கின் அழைப்பின் பேரில், அன்வார் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணம் அன்வாரின் மூன்றாவது சீன பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் பயணத்தை அன்வார் மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பரில் அங்குச் சென்றார்.

பிரதமர் அன்வாரின் நான்கு நாள் பணி பயணம் நவம்பர் 7 ஆம் தேதி பெய்ஜிங்கில் முடிவடையும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *