காஸா விவகாரத்தில் அன்வாரின் நிலைப்பாடு! - அமெரிக்கா வருத்தம்!
- Shan Siva
- 31 May, 2024
காஸாவில் இஸ்ரேலுக்கும்
ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில், மலேசியா முன்வரவில்லை என்பதோடு, மத்தியஸ்தராக தன்னை
முன்வைக்கவில்லை என்பதில் அமெரிக்கா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளதாக மலேசியாவுக்கான
அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி ககன் தெரிவித்தார்.
மலேசியா தன்னை ஒரு
மத்தியஸ்தராக முன்னிறுத்தாது கவலை அளிப்பதாக எட்கார்ட் டி ககன் இன்று காலை BFM 'Breakfast Grille' நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஹமாஸுடனான
உறவைப் பற்றி கேட்டபோது கூறினார்.
மே 23 அன்று, அன்வார் ஹமாஸுடனான தனது
தொடர்ச்சியான ஈடுபாட்டை ஆதரித்தார். பாலஸ்தீனக் குழுவுடனான அவரது பல ஆண்டு கால
உறவுகள், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் அவரது முயற்சிகளும் கவனம்
ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஹமாஸின் சட்டபூர்வமான தன்மையைப் பற்றி மற்ற அரசாங்கங்கள் வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பதை அமெரிக்கா அறிந்திருப்பதாக ககன் கூறினார். இது வாஷிங்டனுக்கும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்
இவ்விவகாரத்தில் அந்தப்
பிராந்தியத்திற்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் நன்மை செய்ய மலேசியா என்ன பங்களிக்க
முடியும் என்பதைப் பார்ப்பதும் முக்கியம்.
காசாவைப் பற்றி ஆழ்ந்த
அக்கறை கொண்டுள்ளோம், மேலும் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை
எடுக்குமாறு அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஹமாஸ் இதை அனுமதிக்கும்
நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் அது அவர்களின் கைகளில் உள்ளது என்று அவர் கூறினார்.
அமெரிக்கர்கள் உட்பட
ஹமாஸ் பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ளது. தாக்குதல்களில்
அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் நீண்ட காலமாக அமெரிக்கர்களை குறிவைத்து
வருகிறது. எனவே
இதைப் பற்றி எங்களுக்கு மிகவும் வலுவான உணர்வுகள் உள்ளன என்று அவர் கூறினார்.
மிக முக்கியமான விஷயம்
என்னவென்றால், பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலிய அரசாங்கம் பொருத்தமான
நடவடிக்கைகளை எடுக்கிறது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *