அன்வாரின் எகிப்து பயணம், இரு நாட்டு உறவுகளில் ஒரு மைல்கல்- எகிப்து மலேசிய தூதர்!

top-news
FREE WEBSITE AD

கெய்ரோ, நவ. 10

எகிப்துக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சனிக்கிழமை கெய்ரோ பயணமானார். அன்வாரின் பயணம், எகிப்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருவழி உறவுகளில் ஒரு குறிப்பிட்ட மைல்கல்லாக விளங்கும் என்று, எகிப்துக்கான மலேசிய தூதர் தாரிட் சுப்பியான் தெரிவித்தார்.

எகிப்திய அதிபர் அப்துல் ஃபாத்தா எல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று கெய்ரோ சென்றிருக்கும் அன்வாரின் இப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பல்வகைப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் வழி வகுக்கும். அதோடு, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு வட்டார மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடித்தளங்களையும் அன்வாரின் இப்பயணம் வலுப்படுத்தும் என்று தாரிட் தெரிவித்தார்.

அன்வாரை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை, கெய்ரோவில் உள்ள அல் இத்திஹாடியா அரண்மனையில் நடைபெற விருக்கிறது. அதன் பின்னர் ஒரு வழி உறவுகள் தொடர்பான கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. "வர்த்தக மற்றும் முதலீடு, தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் சமய விவகாரங்களில் நிலவும் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், இருவழி உறவுகளை மேம்படுத்துவதில் இக்கூட்டம் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தாரிட் தெரிவித்தார். இதைத் தவிர்த்து, இப்பயண காலகட்டத்தில் எகிப்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அன்வார் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *