சிறார்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும்- சமூகநல இல்லம் மூடப்பட்டது!

- Muthu Kumar
- 12 Apr, 2025
பெட்டாலிங் ஜெயா, ஏப்.12-
செராஸ், 9ஆவது மைலிலுள்ள சிறார் கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட தனியார் சமூகநல இல்லம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த தற்காலிக மூடல் அமலாக்க நடவடிக்கை 1993 பராமரிப்பு இல்லச் சட்டம், 15ஆவது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநிலச் சமூகநல இலாகா இயக்குநர் அஸ்மிர் காசிம் தெரிவித்தார்.
அந்த இல்லம் தானாக மூடப்பட்டு விட்டது. காரணம் அதன் நடத்துநரை போலீஸ் கைது செய்து விட்ட வேளையில், சிறார்களைச் சமூகநல இலாகா கொண்டு சென்று விட்டது. இதில் அச்சிறார்கள் மீதான சுகாதார பரிசோதனை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து வருவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது அஸ்மிர் காசிம் குறிப்பிட்டார்.
Sebuah rumah kebajikan swasta di Cheras ditutup sementara susulan kes penderaan kanak-kanak. Pengurus rumah tersebut telah ditahan polis dan kanak-kanak terlibat dipindahkan serta menjalani pemeriksaan kesihatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *