அக்டோபர் 5 ஆம் தேதி பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பசுமை வார நிகழ்வில் கலந்துகொள்ள வாரீர்!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, அக். 1-

வரும் 5.10.24 சனிக்கிழமை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் நடைபெறும் ஆற்றல் சேமிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். இந்த நிகழ்ச்சியின்போது வருகின்ற ஒவ்வொருவருக்கும், தாவர விதைகள், மூலிகை கன்றுகள் மற்றும் தாவரங்கள் இலவசமாக தரப்படும் என அச்சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

தங்களுக்கு பிடித்த பாரம்பரிய விதைகளை பொதுமக்கள் கொண்டு வரலாம். எடுத்தும் செல்லலாம். ஆனால் முதலில் வருபவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும். இயற்கையான குளிர்ச்சி பசுமை நடவடிக்கை வாரம் 2024 அக்டோபரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

மலேசியாவில் இந்த பசுமை செயல் திட்ட வாரத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆற்றல் சேமிப்பு என்பதுதான் இவ்வாண்டின் கருப்பொருள். இதன் அடிப்படையில் ஆற்றல் பாதுகாப்பிற்கான முக்கியமான தேவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சுற்றுச்சூழலுக்கும் நமது சமூகங்களுக்கும் பயனளிக்கும் நடைமுறை தீர்வுகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த பசுமை வாரம்.

பசுமை நடவடிக்கை வாரம் என்பது சமூகங்கள், நாடுகள், பிராந்தியங்களில் நிலையான பயனீடுகளை மேம்படுத்துவதற்கான உலகளாவிய கூட்டு நடவடிக்கை பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பாளர்கள் வளங்களைப் பகிர்வதையும் அணுகுவதையும் இயக்குவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் காட்டுகிறார்கள். ஆகவே, வரும் 5.10.24 சனிக்கிழமை, காலை 9.30 இலிருந்து 12.30 வரை நடைபெறும் பசுமை தினத்தில், சுயமாக இயற்கையான முறையில் சாம்பூ செய்வது, சாலாட் கீரைகள் மற்றும் ஆரோக்கிய மூலிகை பானம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி செயல் விளக்கம் வழி சொல்லித்தரப்படும் என்றார் முகைதீன்.

மேலும் இதே நிகழ்வில், பாரம்பரிய ரசாயனம் இல்லாத ஷாம்பு, பல்வேறு வகையான குளிர்ச்சி தரும் தாவரங்கள், பூக்கள், தானியங்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பது முக்கியமானது. சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிரூட்டும் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான வாழ்க்கை நிலைமைகளை உருவாக்கும் போது தனிநபர்கள் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆற்றலைச் சேமிக்க எவரும் எடுக்கக்கூடிய எளிய செயல்களைக் கற்றுக்கொள்ள, அக்டோபர் 5 ஆம் தேதி பி.ப.சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெறும் பசுமை வார நிகழ்வில் கலந்துகொள்ளும்படி பொதுமக்களை அழைகின்றோம் என்றார் முகைதீன் அப்துல் காதர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *