அமரன் படத்தினை பார்த்து ரசித்த ராணுவ வீரர்கள்!

top-news
FREE WEBSITE AD

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்சன்ஸ்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அமரன் படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார்.

குண்டு துளைத்த அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டபோது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று அவருக்கு வீர வணக்கம் செலுத்தினர். இவரது வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இப்படம் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதால், மேஜர் முகுந்த் எங்கெல்லாம் சென்றாரோ அங்கு நேரடியாகச் சென்று படப்பிடிப்பினை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் மொத்தக் கதையையும் சமர்ப்பித்து அனுமதி கேட்டுள்ளனர். மத்திய அரசும் இதற்கு ஒப்புக் கொள்ள, படப்பிடிப்பு இந்திய ராணுவத் தளவாடங்களில் நடைபெற்றது. மேலும் துப்பாக்கிகளை எப்படி கையாள வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு மும்பையில் ஒரு மாத காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் படப்பிடிப்புக்கே சென்றுள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது, " படப்பிடிப்பு நடைபெற்றபோது இருந்த பதற்றத்தைவிட படத்தினை ராணுவ வீரர்கள் பார்க்கின்றார்கள் என்றபோது இன்னும் அதிகரித்தது. குறிப்பாக ராணுவ வீரர்கள் என்ன சொல்லுவார்கள் என்ற பதற்றம் ஒட்டிக்கொண்டது. படத்தினை இடவேளை வரை பார்த்த சீனியர் ராணுவ வீரர் என்னிடம் வந்து, 'யூ ஆர் இன் ராங் புரொபெஷன்' எனக் கூறினார். படம் முடிந்த பின்னர் அதே மூத்த ராணுவ வீரர் என்னிடம் வந்து ' ஐ கிவ் யூ ஒன்மோர் ஆஃபர், வாட் ஆர் யூ சே' என்றார். அதாவது நான் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தருகின்றேன், என்ன சொல்றீங்க எனக் கேட்டார்.

இதை கேட்ட நான், 'இதுதான் சார் நீங்கள் எனக்கு கொடுக்கின்ற விருது' என மகிழ்ச்சியோடு கூறினேன். நானும் மேஜர் முகுந்தும் மிடில் கிளாஸில் பிறந்தவர்கள் என்பதால் என்னால் அவரை எளிதாக உள்வாங்க முடிந்தது. நான் எந்த இடத்திலும் சினிமாவாக நினைத்து நடிக்கவில்லை என எனது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டினார்" என சிவகார்த்திகேயன் பேசினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *