செத்தியா ஆலாமில் வெ.11,000 மதிப்புள்ள தங்க நகை கொள்ளை ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு!

- Muthu Kumar
- 12 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்.12-
செத்தியா ஆலாம் பல்பொருள் அங்காடி கடையின் முன்புறம் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் கழுத்துச் சங்கிலி கொள்ளையிடப்பட்டதில் ஓர் ஆடவருக்கு வெ.11,000 இழப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் அந்த ஆடவரிடமிருந்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.08 மணிக்குப் புகார் பெறப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி அத்தலத்தில் ஆடவர் தன் மனைவியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் யமாஹா சிவப்பு நிறத்திலான 135எல்சி ரக மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஓர் ஆடவன் வந்தான்.
அங்கு இவர்களின் கார் முன்புறத்தில் சேதமடையும் அளவுக்கு மோதி விட்டதாக அவன் தெரியப்படுத்தினான். அதனைத் தொடர்ந்து காரின் நிலையைச் சோதித்துப் பார்க்கக் களத்தில் இறங்கிய போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்தவன் அந்த ஆடவரின் கழுத்துச் சங்கிலியைப் பின்னாலிருந்து இழுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டான். இச்சம்பவத்தில் அந்த ஆடவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு வரையிலான சிறை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய 392ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
Seorang lelaki mengalami kerugian RM11,000 selepas rantai lehernya diragut di hadapan sebuah pasar raya di Setia Alam. Suspek menipu mangsa kononnya keretanya dilanggar sebelum melarikan rantai tersebut. Kes disiasat di bawah Seksyen 392 Kanun Keseksaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *