இறந்த பெண்ணிடம் இருந்து நகைகளைத் திருடிய போலீஸ்! - மனிதாபிமானமற்ற செயல் என தேசிய போலீஸ் படைத் தலைவர் கண்டனம்!
- Shan Siva
- 02 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 2:
இறந்த பெண்ணிடம் இருந்து நகைகளை திருடியதாகக் கூறப்படும் வழக்கில் பிடிபட்ட நான்கு
போலீஸாரின் செயலை மனிதாபிமானமற்ற நடத்தைக்கு ஒப்பிட்டு, தவறான நடத்தையை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், இந்த விவகாரத்தில் சமரசம் இல்லாமல் முழுமையான விசாரணை
நடத்தப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன்
உறுதியளித்தார்.
எங்கள்
விசாரணையில் இந்த வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தால்
கடுமையான நடவடிக்கை எடுக்க நதயங்க மாட்டோம். இதுபோன்ற நடத்தை பொறுப்பற்றது மற்றும்
மனிதாபிமானமற்றது என்று அவர் எச்சரித்தார்.
யாராக இருந்தாலும்,
காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம்
விளைவிக்கும் செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை நினைவூட்டுவதாக இந்தக்
கைதுகள் இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.
உள்ளூர் நபர்
ஒருவர் புகாரளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக நான்கு காவலர்களும் ஸ்தாப்பாக்கில்
கைது செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அவரது மகள்
சிலாங்கூரில் உள்ள பந்திங்கில் அடக்கம் செய்யப்பட்டவுடன், அவளுடைய பாட்டியும் சகோதரியும் அவளுக்குக் கொடுத்த சங்கிலி,
லாக்கெட் மற்றும் வளையலைத் தேட வேண்டிய
கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
வாகனத்தில்
கண்டெடுக்கப்பட்ட போது அவர் நகைகள் எதுவும் அணியவில்லை என பொலிஸாரினால் அவருக்குத்
தெரிவிக்கப்பட்டது. வாடகை வீடு முழுவதும் தேடியும் பலன் கிடைக்காததால், பூட்டியிருந்த காரின் கண்ணாடியை உடைத்த
தீயணைப்பு துறையினருக்கு விவரத்தை அனுப்பினர்.
சம்பவத்தன்று,
தீயணைப்புத் துறையினர் வாகனம்
பூட்டப்பட்டிருந்ததால், கார் கண்ணாடியை
உடைப்பதற்கு முன்பும் பின்பும் புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். அவர் கூறியபடி,
புகைப்படங்களின் அடிப்படையில், அடுத்த நடவடிக்கைக்காக அவரது உடல்
காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, அவரது மகள் நகைகளை அணிந்திருந்தார்.
புகைப்படங்கள்
தனது மகள் அணிந்திருந்த நகைகளை தெளிவாகக் காட்டுவதாகவும், ஆனால் போலிசார் வழங்கிய புகைப்படங்களில் செயின் மற்றும்
வளையல் காணவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த அவர், விசாரணை அதிகாரி இந்த வழக்கு தொடர்பாக ஒத்துழைக்கவில்லை என்று ஏமாற்றம் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *