சட்டவிரோத வலையில் செத்துக் கிடந்த டால்பின்!

- Shan Siva
- 21 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 21: கோலா கெடா கடற்கரையில் மீனவர்கள் விட்டுச் சென்ற
சட்டவிரோத மீன்பிடி வலையில் அழிந்து வரும் கடல் இனமான ஐராவதி டால்பினின் சடலத்தை
மலேசிய கடல்சார் அமலாக்க முகைமை (MMEA) கண்டுபிடித்துள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் வழக்கமான ரோந்துப் பணியின் போது கோலா கெடா கழிமுகத்திலிருந்து
சுமார் 1.1 கடல் மைல் தொலைவில் ஏஜென்சியைச் சேர்ந்த ஒரு குழுவினரால்
இந்த டால்பின் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலா கெடா கடல்சார் இயக்குநர் நூர்
அஸ்ரேயந்தி இஷாக் கூறினார்.
எம்பெசுட் என்று
அழைக்கப்படும் ஐராவதி டால்பின், மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசியாவில் அழிவின்
விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
Seekor ikan lumba-lumba Irrawaddy yang terancam ditemui mati terperangkap dalam pukat haram di perairan Kuala Kedah. Penemuan dibuat MMEA semasa rondaan. Kes disiasat kerana spesies ini di ambang kepupusan dan dilindungi di Malaysia serta Asia Tenggara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *