பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 16:

ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாகக் கருதப்படும் 39 வயது பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பண்டார் செலேசா ஜெயாவில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக இஸ்ண்டார் புத்ரி காவல் துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

தாமான் துங்கு அமினாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் 24 முதல் பணிக்குச் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.அழுகிய நிலையில் உடல் மிகவும் மோசமாகிப் போனதால், மரணத்திற்கான காரணத்தை பிரேத பரிசோதனையில் கண்டறிய முடியவில்லை என்று குமரேசன் கூறினார்.

மேலும் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.சம்பந்தப்பட்ட அந்தப் பெண் திருமணமாகாதவர் என்றும், தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Seorang guru wanita berusia 39 tahun ditemui mati dalam keadaan reput di rumahnya di Iskandar Puteri. Mayat dijumpai selepas jiran mengadu bau busuk. Tiada unsur jenayah dikesan, dan kes diklasifikasikan sebagai mati mengejut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *