RM 3,38,000 இழப்பீடு! தடுப்புக்காவலில் மரணமுற்ற பாலமுருகன் குடும்பதினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
- Shan Siva
- 31 May, 2024
பாதிப்புகள்
குறித்த மதிப்பீட்டுக்கான நேற்றையை விசாரணையின்போது,
நீதிபதி சூ தியாங் ஜோ பாலமுருகனின் குடும்பத்திற்கு இந்த இழப்பீட்டை வழங்கியதாக, லாயர்ஸ் ஃபார் லிபெர்டி, நேற்று ஓர் அறிக்கையில்
தெரிவித்தது.
பொதுவான
பாதிப்புகளுக்காக ஒரு லட்சம் வெள்ளியையும்,
கடுமையான பாதிப்புகளுக்காக 2 லட்சம் வெள்ளியையும், சிறப்பு பாதிப்புகளுக்காக 16 ஆயிரம் வெள்ளியையும், செலவுகளுக்காக 22 ஆயிரம் வெள்ளியையும் நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக மனித உரிமைகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கான சீர்திருத்தக் குழுவான லாயா்ஸ் ஃபார் லிபெர்டி தெரிவித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு
பிப்ரவரி 8ஆம் தேதி,
கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகக்
காவலில் இருந்தபோது பாலமுருகன் இறந்ததற்கு அலட்சியம், தாக்குதல், தவறான முறையிலான சிறை மற்றும் சட்டப்பூர்வ
கடமையை மீறியதற்காக, போலீஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக
பாலமுருகனின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் முடிவு இதுவாகும்.
“இறந்தவரின்
மரணத்திற்கு போலீஸ் துறையும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி, கோலாலம்பூர் உயர
நீதிமன்றம் கண்டறிந்தது. அதோடு,
சேதங்களுக்குத்
தனித்தனியாக மதிப்பிடவும் உத்தரவிட்டிருந்தது” என்று லாயர்ஸ் பார் லிபெர்டி
கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *