பருவமழையால் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி காட்டு விலங்குகள் வரலாம்!
- Muthu Kumar
- 22 Nov, 2024
ஜொகூர்பாரு, நவ. 22-
வரும் நாட்களில் பருவமழை மோசமடையும் என்பதால், குடியிருப்புப் பகுதிகளை நோக்கி காட்டு விலங்குகள் வரலாம் என்று ஜொகூர் மாநில வனவிலங்கியல் மற்றும் தேசியப் பூங்காத்துறையின் இயக்குநர் அமினுடின் ஜாமின் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக யானைகள் போன்றவை வெள்ளம் ஏறும் தாழ்வான பகுதிகளிலிருந்து மேட்டுப்பாங்கான பகுதிக்கு இடம்பெயறும் சாத்தியம் உள்ளது. எனவே,பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். யானைகள் மட்டுமின்றி, காட்டுப் பன்றிகள், குரங்குகள் போன்றவையும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் படையெடுக்கலாம்.
பாம்புகளும் இதர பிராணிகளும் வீடுகளுக்குள் நுழையலாம் என்று அவர் தெரிவித்தார்.கடந்தாண்டில் காட்டு விலங்குகளின் அட்டகாசம் குறித்து 1,564 புகார்கள் கிடைத்தன. அவற்றில் 65 விழுக்காட்டு புகார்கள் குரங்குகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *