இன – மத உணர்வுகளை வைத்து விளையாடாதீர்கள்! - அன்வார் எச்சரிக்கை
- Shan Siva
- 31 May, 2024
கோத்தா கினாபாலு, மே 31: வலுவான இன
மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி விளையாடுவதன் மூலம்,
மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை குழிபறிக்கும் சில தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார்.
நாட்டில் நடந்த அரசியல்
சண்டைகளில் சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும், அரசியல் பிரபல்யம் பெறுவதற்காக இத்தகைய உணர்வுகளைத் தொடரச் செய்வதாகவும்
பிரதமர் கூறினார்.
அத்தகைய நபர்கள் மற்ற
இனங்களின் இருப்பு மற்றும் பிரதிநிதித்துவ உரிமையை மறுக்கும் உச்சநிலைக்குச் செல்வதோடு, சிலர் மத உணர்வுகளை வைத்து விளையாடி மற்றவர்களை
மதிப்பற்றவர்கள் என்றே கருதுகின்றனர்.
மலேசியாவில் உள்ள
ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்பட தனது அரசாங்கம் தொடர்ந்து போராடும் மற்றும்
உறுதிசெய்யும் என்பதில் எப்போதும் தெளிவாக இருப்பதாக அன்வார் கூறினார்.
சில தீவிரமான கருத்துகளை
வெளிப்படுத்தும் சக்திகள் இருப்பதால், இந்தக் கருத்தை தாம்
தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப்
பிறகும், இன்னும் இதுபோன்ற கருத்துகளைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது
என்று
அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *