ஜொகூர் மாநில வார இறுதி விடுமுறையை அரசியலாக்காதீர்- ஓன் ஹஃபீஸ் காஸி !

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 12-

ஜொகூர் மாநிலத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக் கிழமைக்கும் மாற்றப்படவிருக்கும் விவகாரத்தை அரசியலாக்கி வருவதை நிறுத்திக் கொள்ளும்படி அம்மாநில மந்திரி அனைத்துத் தரப்பினரையும் பெசார் ஓன் ஹஃபீஸ் காஸி நேற்று வலியுறுத்தினார்.

விடுமுறை மாற்றம் தொடர்பாக ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் பிறப்பித்த உத்தரவை மாநில அரசாங்கம் மதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவது நல்லதல்ல என்பது மாநில அரசின் கருத்தாகும். ஒவ்வொரு முடிவும் மாநிலத்தின் நலன்களையும் மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறது என்று தமது முகநூல் பக்கத்தில் ஓன் ஹஃபீஸ் வலியுறுத்தினார்.

ஜொகூரின் முப்தி மற்றும் மாநில இஸ்லாமிய விவகாரக் குழுவின் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்படுவது ஜொகூர் மக்களுக்கு நன்மையை கொண்டுவரும். தங்கள் குடும்பத்தினருடன் திட்டமிட்ட முறையில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதற்கும் அது வழிவகுக்கும் என்றார் அவர்.

திரெங்கானு, கிளந்தான், கெடா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி ஜொகூரும் தற்போது வெள்ளிக்கிழமையையும் சனிக்கிழமையையும் வார இறுதி விடுமுறை நாட்களாக கடைப்பிடித்து வருகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *