பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்களை வாங்கி அவதிப்பட வேண்டாம்! மக்களுக்கு MDA எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

மருத்துவ சாதன ஆணையத்தின் (எம்.டி.ஏ) தலைமை நிர்வாகி டாக்டர் முரளிதரன் பரமசுவா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் நவம்பர் 2023 இல் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் கெலுகோரில் உள்ள நிறுவன வளாகத்தில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்துடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டது என்றும் மேலும் பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்கள் விற்பனை செய்யும் நிறுவனம், நவம்பர் 2023 இல் உரிமம் ரத்து செய்யப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது, பாதுகாப்பற்ற கண் சாதனங்களை விற்பனை செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.


மே 20 அன்று நடந்த இரண்டாவது சோதனையில், 19 எம்டிஏ அதிகாரிகள் கொண்ட குழு, மொத்தம் 101,186 லேபிள் ஒட்டப்படாத காண்டாக்ட் லென்ஸ்கள், 42,098 வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கான்டாக்ட் லென்ஸ்கள், 276 நிறுவன லேபிள் ஸ்டிக்கர்கள் மற்றும் 25 தொடர்புடைய ஆவணங்கள் என மொத்தம்  RM 700,000  மதிப்பிடப்பட்டுள்ளது.தென் கொரியாவில் இருந்து கான்டாக்ட் லென்ஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் முரளிதரன் கூறினார்.

பதிவு செய்யப்படாத பொருட்களைப் பயன்படுத்துவதினால் கண்கள் வீக்கம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அல்லது கார்னியல் காயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த நிறுவனத்தால் விற்கப்படும் பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்கள் RM9 அல்லது RM10க்கு விற்கப்படுகின்றன, இது சந்தை விலையை விட மிக மிகக் குறைவு.
இருந்தாலும் இவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது, ஏனெனில் அவை MDA ல் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த பதிவு செய்யப்படாத பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்கள் MDAயிடம் உடனடியாகபுகார் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

எந்தவொரு நிறுவனமும் உரிமம் இல்லாமல் சந்தையில் மருத்துவ சாதனங்களை தொடர்ந்து விற்பனை செய்தால்  மருத்துவ சாதன சட்டத்தின் பிரிவு 25 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படுகிறது.  இது அதிகபட்சமாக RM 200,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *