KTM மகளிர் கோச்சில் முதிய பெண்மணியைச் சீண்டிய இளைஞர்கள்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 2: KTM கம்யூட்டர் மகளிருக்கான கோச்சில் துன்புறுத்தப்பட்ட 72 வயதான பள்ளி முன்னாள் ஆசிரியருக்கு KTMB தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து  அந்த முதிய பெண்மணியின் மகளான லீ  தமது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, புக்கிட் பாடாக் நிலையத்திலிருந்து ஷா ஆலம் நிலையத்திற்குப் பயணித்த  அவரது தாயாருக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புவதாக KTMB  தகவல் தொடர்புத் துறை இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.  கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாதுவின் மகள் லீ தனது முகநூல் பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கிள்ளான் செல்லும் ரயிலில் ஏறிய பிறகு, பெண்கள் மட்டுமே செல்லும் கோச்சில் அமர்ந்திருந்த இளைஞர்களின் தகாத நடவடிக்கைகளைத் தமது தாயார் எதிர்கொள்ள நேர்ந்ததாகப் பதிவிட்டுள்ளார்.

மகளிர் பெட்டியில் இடம் பிடித்ததற்காக தமது தாயார்அவர்களுக்கு அறிவுறுத்தியதால் இந்த துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்,.

இதனை அடுத்து KTMB வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஏற்கனவே, பாதிக்கப்பட்ட முதிய பெண்மணிய்ன் மகளைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவித்துள்ளது.

KTM Komuter சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காகவே மகளிர் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், பயணிகள் இண்டர்காம் பொத்தானைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்  அல்லது KTMB இன் துணை காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *