மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் யூடியுபர் இர்பான்!
- Muthu Kumar
- 22 Oct, 2024
உணவுகளைப் பற்றி ரிவ்யூ சொல்லி அதன் மூலம் காசு பணத்தை சம்பாதித்து வந்த இர்ஃபான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடத்தில் பிரபலமாகிவிட்டார்.அதன் பிறகு பிரபலமாகியதால் திரை பிரபலங்களை சந்தித்து அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டே பேட்டி எடுத்து அதையும் அவருடைய youtube பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார்.
அதே மாதிரி வெளிநாடுகளுக்கும் சென்று விதவிதமான தெருவில் இருக்கும் சாப்பாடுகளை ரிவியூ செய்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று முதல் ரன்னராக வெற்றி பெற்றார். ஆனால் இதற்கு இடையில் அவ்வப்போது சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு சில விஷயங்களையும் செய்து சிக்கினார்.
அதாவது இவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதை கண்டறியும் விதமாக பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று தெரிந்து கொண்டார். அதை அப்படியே சீக்ரெட் ஆக வைத்துக்கொள்ள முடியாத இர்ஃபான் அதை இங்கே ஒரு விழாவாக நடத்தி என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்ற அறிவிப்பை கொடுத்துவிட்டார்.
ஆனால் இந்தியாவில் இந்த மாதிரி பாலினத்தை கர்ப்பமாக இருக்கும் பொழுது தெரிந்து கொள்வது தவறு. அதிலும் ஒட்டுமொத்த மக்கள் பார்க்கும் அளவிற்கு வீடியோவாக போட்டதால் சர்ச்சையில் சிக்கி மெடிக்கல் கவுன்சில் இவரிடம் விளக்கம் கேட்டதால் அதற்கு மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் தற்போது அதே மாதிரி ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது இவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அதை பக்கத்தில் இருந்து பார்த்ததோடு இல்லாமல் அதை காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் என்னுடைய மகனின் தொப்புள் கொடியை நானே கட் பண்ணுகிறேன் என்பதற்கேற்ப தொப்புள்கொடியை கட் பண்ணிய காணொளியையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவர்கள் இந்த வீடியோவை பார்த்து, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் விதமான செயல் என்பதால் மருத்துவத்துறையினர் இதற்கான விளக்கத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை இதற்கான விளக்கத்தை இர்பான் முழுமையாக கொடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து மருத்துவ ஊரக நலப்பணி இயக்குனர் விளக்கம் கொடுத்திருக்கிறது.
அதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை சோழிங்கநல்லூரில் உள்ளது. அவர்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இது தவறு என்னும் பட்சத்தில் கிளினிக்கில் Experiment act என்கிற சட்டத்தின் படி மருத்துவமனையின் லைசென்ஸ் கேன்சல் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
அதற்கு அடுத்தபடியாக சம்பந்தப்பட்டுள்ள மருத்துவர்களிடம் எப்படி நீங்கள் இதற்கு அனுமதிக்கலாம் என்று மெடிக்கல் கவுன்சிலிங் மூலம் ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறார்கள். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலிங் தான் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க அவருடைய சேனலை விளம்பரப்படுத்தி அதன் மூலம் content கிடைப்பதற்காக ஆபரேஷன் ரூமுக்குள் கேமராவை கொண்டு போய் ஆப்ரேஷன் தியேட்டரில் குழந்தை பிறக்கிறதை எடுத்தது மிகப்பெரிய குற்றம்தான். இந்த மாதிரியான ஒரு சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆப்ரேஷன் தியேட்டருக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது. இதை மீறியதால் இர்பான் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *