செவிலியர்களுக்கு RM15,000 சைன்-ஆன் போனஸை அரசாங்கம் வழங்க வேண்டும்!
- Muthu Kumar
- 23 Oct, 2024
பெட்டாலிங் ஜெயா:
2025 பட்ஜெட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு RM15,000 சைன்-ஆன் போனஸை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மலேசிய தனியார் மருத்துவமனைகளின் சங்கம் பரிந்துரைத்துள்ளது.போனஸ் அரசாங்கத்தால் மூன்றாண்டு காலத்திற்கு விநியோகிக்கப்படும் என்று அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங், முன்மொழிந்தார். அத்தகைய முயற்சி மலேசிய செவிலியர் பட்டதாரிகளை தங்கள் சொந்த நாட்டில் சேவை செய்ய உதவும் என்று கூறினார்.
உள்ளூர் சுகாதார சேவைக்கான அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வடிவமைக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, ஒரு தனிநபர் மலேசியாவை விட்டு வெளியேற முடிவு செய்தால், வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மலேசியர்களுக்கு செவிலியத்தை கவர்ச்சிகரமான தொழில் விருப்பமாக ஊக்குவிப்பதில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளன என்று குறிபிட்ட அவர், இறுதியில் உள்ளூர் திறமைசாலிகளுடன் நமது சுகாதார அமைப்பை பலப்படுத்துகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தனித்தனியாக, தனியார் மருத்துவமனைகளில் வெளிநாட்டு செவிலியர்களின் சேர்க்கையை செப்டம்பர் 30, 2027 வரை நீட்டித்ததற்காக சுகாதார அமைச்சகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.அமைச்சின் இந்த முன்முயற்சி மலேசிய குடிமக்களுக்கான தனியார் சுகாதார சேவைகளின் நிலைத்தன்மையை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *