RM12,000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 01 Nov, 2024
நவம்பர் 1,
பொது சந்தைகளில் சமூகநல அமைப்பினர் எனும் அட்டையுடன் நிதி வசூலிக்கும் கும்பலைச் சோதனையிட்டதில் பொய்யானத் தகவல்களைக் கொண்டு நிதி வசூலித்த 4 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
மதம் சார்ந்த பள்ளிகள் இருப்பதாகவும் கைவிடப்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி வசூலிப்பதாகத் தெரிவித்து ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் RM400 வசூலிப்பதாகவும் மாதத்திற்கு RM 12,000 வரையில் சம்பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சோதனையில் 2 தாய்லாந்து ஆடவர்கள் 1 கம்போடிய ஆடவர், 1 பாக்கிஸ்தான் ஆடவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 22 முதல் 56 வயதினர்கள் என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ளது.
Jabatan Imigresen Johor menahan empat warga asing yang mengemis di pasar malam Taman Nusa Perintis. Mereka dipercayai mampu meraih hingga RM12,000 sebulan dan menyalahgunakan pas lawatan sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *