ஹாங்காங்கில் மலேசியர் மீது விழுந்த கான்கிரீட் துண்டு! இரண்டு அறுவை சிகிச்சைகளோடு மருத்துவமனையில் மலேசியர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9: ஹாங்காங்கின் பரபரப்பான Tsim Sha Tsui பகுதியில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த 44 வயதான Ng Shu Lin, நாதன் சாலையில் உள்ள Yau Lai கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு கான்கிரீட் துண்டால் தாக்கப்பட்டார். அவரது தலையில் அந்த கான்கிரீட் பாகம் விழுந்ததால் பலத்த காயத்திற்குள்ளாகி உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உலக மகப்பேறு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக Ng சென்று கொண்டிருந்தபோது, ​​அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் உயரமான கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

 இதனை அடுத்து அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. Ng, இன்னும் பலவீனமாக உள்ளதோடு, ஹாங்காங் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு தனது சட்ட விருப்பங்களை ஆராய ஒரு வழக்கறிஞரை அணுக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *