கோலாலம்பூர் பாதுகாப்பாக உள்ளது! குண்டர் கும்பலைக் கைது செய்வோம்! - காவல்துறை!

top-news

ஜூன் 18,

தலைநகர் கோலாலம்பூரில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa உறுதியளித்தார். கடந்த 4 நாள்களில் பிரிக்பீல்ட்ஸிலும் செராஸிலும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் அடிப்படையில் கோலாலம்பூர் பாதுகாப்பற்ற பகுதியாகிவிட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என Datuk Rusdi Mohd Isa வலியுறுத்தினார். 

செராஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு சரவாக்கியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கள்ளக் கடத்தல் நடவடிக்கையின் காரணமாக இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்விரோதம் காரணம் என்றும் இது இரு குண்டர் கும்பலுக்கும் தனிநபர்களுக்குள் ஏற்பட்ட அத்துமீறல் என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என Datuk Rusdi Mohd Isa கேட்டுக் கொண்டார். சம்மந்தப்பட்ட 2 துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை விரைந்து கைது செய்யும் என Datuk Rusdi Mohd Isa வலியுறுத்தினார்.


Datuk Rusdi Mohd Isa menegaskan Kuala Lumpur masih selamat walaupun dua kejadian tembakan berlaku di Brickfields dan Cheras. Polis percaya ia berpunca daripada konflik kumpulan jenayah dan menjamin tindakan tegas serta penangkapan segera terhadap suspek.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *