பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் விலகுமா? – சபா தேர்தலில் பாஸ் கட்சியுடன் GRS கட்சி பேச்சுவார்த்தை!

top-news

நவம்பர் 10,

சபா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஸ் கட்சி பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிடுமா என்பது இன்னும் உறுதிச் செய்யவில்லை என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். அதே வேளையில் பாஸ் கட்சி GRS கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதை அவர் உறுதிப்படுத்தினார். 
முன்னதாகச் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகள் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்காத GRS கட்சி தற்போது பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. GRS கட்சிக்கும் BARISAN கட்சிக்கும் மோதல் இருந்தாலும் இரு கட்சிகளும் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்ற நிலையில் பக்காததானுடன் கூட்டணிக்கும் GRS கட்சி இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த சபா மாநிலத் தேர்தலில் GRS கட்சி GAGASAN, STAR, PBS, SAPP, PHRS, கட்சிகளுடன் இணைந்து 79 சட்டமன்றத் தொகுதிகளில் 42 சட்டமன்றங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

PAS masih belum pasti bertanding di bawah logo Perikatan pada pilihan raya negeri Sabah. Namun, PAS kini berbincang dengan GRS, menyebabkan spekulasi politik mengenai kemungkinan kerjasama antara kedua-dua parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *