பார்வை அளவையியல் சட்ட மசோதா அக்டோபரில் தாக்கல்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 19-

ஓபோமெட்ரி எனப்படும் பார்வை அளவையியல் சட்ட மசோதா, அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கண் மருத்துவத் தொழிலின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட சட்டமாக அச்சட்ட மசோதா இருக்கும் என்று சுகாதார அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

'இது ஒரு தனிப்பட்ட சட்ட விதிமுறைகளாக இருக்கும். இது நடைமுறைகள், பயிற்சி, பதிவு மற்றும் அனைத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தும். கண் மருத்துவர்களின் நடைமுறைகளுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, பார்வை நிபுணர்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டது.அந்த பார்வை அளவையியல் சட்ட மசோதாவில் இருக்கும். என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் கண் மருத்துவர் தொழிலுக்கான முதன்மை கண் பராமரிப்பு சேவை வழிகாட்டிகளை அறிமுகப்படுத்தும் விழாவிற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுல்கிஃப்ளி அவ்வாறு கூறினார். பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமலாக்கம் மற்றும் அபராதங்களுடன் ஒளியியல் தயாரிப்புகளின் இணைய விற்பனையின் அம்சங்களை அச்சட்ட மசோதா உள்ளடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rang Undang-Undang Optometri dijangka dibentang di Parlimen Oktober ini bagi mengawal selia semua aspek amalan optometri negara. Ia merangkumi prosedur, latihan, pendaftaran serta penjualan produk optik dalam talian demi keselamatan pengguna.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *