PTPTN கடன்! நிலுவையில் 6 பில்லியன் ரிங்கிட்! - உயர்கல்வி அமைச்சு

top-news

அக்தோபர் 22,

உயர்கல்வி மாணவர்களுக்காக வழங்கப்படும் PTPTN கடனை வசூலிக்க அரசாங்கம் மிதமான அணுகுமுறையை மட்டுமே கையாளும் என துணை உயர்கல்வி அமைச்சர் Datuk Mustapha Sakmud உறுதியளித்தார். ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் Sabri Azit PTPTN கடன் 6 பில்லியன் ரிங்கிட் நிலுவையில் இருப்பதால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்த நிலையில் துணை உயர்கல்வி அமைச்சர் Datuk Mustapha Sakmud, PTPTN கடனை வசூலிக்க அரசாங்கம் யாரையும் கட்டுப்படுத்தாது, அதே வேளையில் PTPTN கடனைத் திருப்பி செலுத்தும்படியும் அழுத்தம் கொடுக்காது. அதிகபட்சமாக வெளிநாட்டுக்கு செல்ல நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்றும், கல்விக்காக தாம் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேலை கிடைத்த பின்னர் நிச்சயம் கடனை அடைப்பார்கள் என தாம் நம்புவதாகவும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரசாங்கம் இந்த நிதியைச் சமாளித்து தான் ஆக வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Timbalan Menteri Pengajian Tinggi, Datuk Mustapha Sakmud, menegaskan kerajaan tidak akan memaksa pelajar membayar balik hutang PTPTN, yakin graduan akan membayar selepas mendapat pekerjaan, dengan syarat minimum dikenakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *