தெலுக் இந்தானில் அரிவாளுடன் கொள்ளையடித்த மூவர்! இருவர் காயம்!

- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
கடை வீதியில் அரிவாளுடன் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்த கொள்ளையில் ஈடுபட்ட மூவரின் ஒருவரைக் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாக Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த ஜூன் 15 அதிகாலை 1 மணியளவில் தெலுக் இந்தானில் உள்ள Jalan Changkat Jong கேளிக்கை மையத்தில் நிகழ்ந்ததாகவும் கொள்ளை நடந்ததும் கேளிக்கை மையத்தின் பாதுகாவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார்.
கொள்ளையில் ஈடுபட்ட மூவரின் ஒருவர் 37 வயது உள்ளூர் ஆடவர் என்றும் அவரைக் கொள்ளை குற்றங்களுக்காகக் காவல்துறையினர் முன்னமே தேடிவருவதாகவும் Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் Hilir Perak மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார். இந்த கொள்ளையின் போதூ சம்மந்தப்பட்ட கேளிக்கை மையத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வாகனங்களும் சேதமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
Tiga lelaki bersenjatakan parang merompak pusat hiburan di Teluk Intan, menyebabkan dua individu cedera. Salah seorang suspek dikenal pasti sebagai lelaki tempatan berusia 37 tahun dan dikehendaki polis atas kes rompakan lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *