கொண்டோமினியத்தில் போதைத் தொழில்! செந்தூலில் சிக்கிய 3,36,50,000 வெள்ளி போதைப்பொருள்!

top-news
FREE WEBSITE AD

(கோபி)
 
தலைநகர் செந்தூலில் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சுமார் 3 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி  மதிப்புள்ள MDMA போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் ச்சின் தெரிவித்தார்.
 
கடந்த மே 26 ஆம் தேதி, பிற்பகல் 3.50 மணிக்கு, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN)  மேற்கொண்ட நடவடிக்கையில், இது தொடர்பாக இரண்டு உள்ளூர் சீன ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். வேலையில்லாத அவ்விரு சீன ஆடவர்களுக்கும் குற்றவியல் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
வாடகைக்கு அந்த ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி போதை மருந்துகளைப் பதப்படுத்த மற்றும் பேக்கேஜிங் செய்வதற்காக,  அந்த கொண்டோமினியத்தைப்  பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையங்களில் போதை வஸ்துகளை விநியோகம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதனை அடுத்து இவ்வழக்கு ADB 1952 மற்றும் பிரிவு 39B இன் கீழ்   விசாரிக்கப்பட்டு வருகிறது
 
சந்தேக நபர்கள் 7 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *