RM 11.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD


ஜொகூர், ஜூன் 1: ஜொகூர் பாரு மற்றும் இஸ்கண்டார் புத்ரி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட  ஏழு சோதனைகளில் சுமார்  RM11.6 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு சிண்டிகேட் மூளையாக  செயல்பட்ட நபர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் காவ் கோக் சின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 22 முதல் 52 வயதுடைய 6 பெண்கள் உட்பட இரண்டு மலேசியர்களும்,  14 வெளிநாட்டவரும் அடங்குவர் என்று காவ் கூறினார்.

சிண்டிகேட்டின் மூளையாகச் செயல்பட்டவர் - 49 வயதான வெளிநாட்டவர் என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் எக்ஸ்டசி பவுடர் மற்றும் மாத்திரைகள், சியாபு, கெத்தாமைன், எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் எம்.டி.எம்.ஏ.  போதைப்பொருட்களை பதப்படுத்துவதற்கான ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் 198.54 கிலோ எடையிலானது என்றும், 1.24 மில்லியன் பேருக்கிப் போதுமானதாக இருப்பதாகவும் அவர் ஜொகூர் பாரு காவல் படைத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆறு வாகனங்கள், 14 கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் RM204,069, S$22,970 ரொக்கப் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஜனவரி முதல் செயல்படும் சிண்டிகேட், நிலம் மூலம் அண்டை நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு முன்பு மருந்துகளை பதப்படுத்தி பேக்கேஜ் செய்வதற்காக கொண்டோமினியம் மற்றும் மாடி வீடுகளை பாதுகாவலர்களுடன் வாடகைக்கு எடுத்ததாக காவ் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் புதன்கிழமை வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *