15 வெளிநாட்டினர்களைக் கடத்திய இருவர் கைது!

top-news

ஜூன் 18,


சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குக் கடத்திய இருவரைக் கிளாந்தான் காவல்துறையினர் கைது செய்தனர். கிளாந்தான் ஜெலியில் உள்ள சாலையில் சந்தேகத்திற்குரிய Toyota Velfire வாகனத்தைச் சோதனையிட்ட போது 15 வெளிநாட்டினர்களுடன் 2 உள்ளூர் ஆடவர்களும் இருந்ததாகவும் சம்மந்தப்பட்ட 15 வெளிநாட்டினர்களிடம் எந்தவோர் ஆவணங்களும் இல்லாதது சோதனையில் தெரிய வந்த நிலையில் அவர்களையும் உடன் இருந்த 2 உள்ளூர்வாசிகளையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 31 வயது 24 வயது உள்ளூர்வாசிகள் இருவரும் இன்று Pasir Mas Sesyen நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்ட நிலையில் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமின் கோரிய நிலையில் அவர்களின் ஜாமின் மனுவை ரத்து செய்து தடுப்புக் காவலை நீட்டிக்க Pasir Mas Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்மந்தப்பட்ட 15 வெளிநாட்டினர்களில் 10 ஆண்களும் 5 பெண்களும் மேலதிக விசாரணைக்காகக் கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கும்படியும் அடுத்த ஜூலை 24 விசாரணையைத் தொடர்வதாகவும் Pasir Mas Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.


Polis Kelantan menahan dua lelaki tempatan kerana disyaki menyeludup 15 warga asing tanpa dokumen sah. Mereka ditahan bersama Toyota Vellfire di Jeli. Mahkamah Sesyen Pasir Mas menolak permohonan jaminan dan melanjutkan tahanan sehingga 24 Julai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *