RM151,000 மதிப்பிலான பசு மாடுகளைக் கடத்திய இளைஞர் கைது!

top-news

ஜூன் 21,


சட்டவிரோதமாகப் பசு மாடுகளை வெளிநாட்டிலிருந்து கடத்திய 28 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாக எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA தெரிவித்துள்ளது. மாலை 4 மணியளவில் சந்தேகத்திற்குரிய TRELER லாரி தும்பாட் சாலையில் சுற்றித் திரிவதைக் கண்ட PGA அதிகாரிகள் லாரி சோதனையிட்டதாகவும் சோதனையின் போது லாரியிலிருந்த 11 பசு மாடுகளும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட லாரியிலிருந்த 11 பசு மாடுகளும் வெளிநாட்டுப் பசு மாடுகள் என்றும் முறையான சுகாதாரப் பரிசோதனை செய்யப்படாமல் தாய்லாந்து வழியாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பசு மாடுகளின் மதிப்பு RM151,000 என கணக்கிடப்பட்டிருக்கும் நிலையில் லாரி ஓட்டுநரான 28 வயது உள்ளூர் ஆடவர் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தென்கிழக்கு எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab. Hamid தெரிவித்தார்.


Seorang lelaki tempatan berusia 28 tahun ditahan PGA kerana menyeludup 11 ekor lembu dari Thailand tanpa pemeriksaan kesihatan sah. Lembu bernilai RM151,000 itu ditemui dalam treler di Jalan Tumpat dan disita untuk siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *