101 போலி பாஸ்போர்ட்டுகளுடன் மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Jun, 2025
ஜூன் 18,
தலைநகரில் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் போலி கடப்பிதழைத் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த பாக்கிஸ்தான் ஆடவர் ஒருவரையும் ஒரு பெண் மற்றொரு உள்ளூர் ஆடவரையும் கைது செய்தனர். கோலாலம்பூர் JALAN IPOH சாலையில் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரையில் இச்சோதனையை மேற்கொண்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் DATUK ZAKARIA SHAABAN தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 2 உள்ளூர்வாசிகளில் ஒருவர் அரசு ஊழியர் என்றும் மற்றொருவர் தனியார் நிறுவன மேலாளர் என்றும் தெரிய வந்துள்ளது.
சோதனையின் போது 74 இலங்கை கடப்பிதழ்கள், 13 மியான்மார் கடப்பிதழ்கள், 6 வியாட்னாம் கடப்பிதழ்கள், 2 இந்தோனேசிய கடப்பிதழ்கள், 2 கானா கடப்பிதழ்கள் உட்பட India, Pakistan, Bangladesh, Syria என மொத்தம் 101 போலி கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபரான Pakistan ஆடவர் அலுவலகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ள Toyota Vellfire வாகனத்தில் மறைந்திருந்த நிலையில் அவரையும் கைது செய்திருப்பதாக தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் DATUK ZAKARIA SHAABAN தெரிவித்தார்.
Tiga individu termasuk seorang warga Pakistan ditahan di Jalan Ipoh, Kuala Lumpur kerana disyaki terlibat dalam sindiket pasport palsu. Sebanyak 101 pasport pelbagai negara dirampas termasuk dari Sri Lanka, Myanmar, Vietnam, dan Indonesia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *