மலேசியாவில் இஸ்ரேல் கப்பல் கொள்கலன் விவகாரம்... போக்குவரத்து அமைச்சுக்கு துணைப் பிரதமர் உத்தரவு!
- Shan Siva
- 04 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 4: மலேசியத் துறைமுகங்களில் இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட கப்பல்
நிறுவனங்களின் கொள்கலன்கள் ஏற்றப்படுவதை போக்குவரத்து அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர்
அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசியாவுக்கு
இஸ்ரேலுடன் இராஜதந்திர அல்லது நேரடி வணிக உறவுகள் இல்லை. இந்த விவகாரம் ஒட்டுமொத்த
மலேசியர்களுக்கும் மிகவும் நெருக்கமானது. இதில் நாம்
சமரசம் செய்து கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
அமைச்சு இவ்விவகாரத்தில்
தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும், இது மீண்டும் நடக்காது என்றும் இன்று ஒரு
செய்தியாளர் கூட்டத்தில் ஜாஹிட் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இஸ்கந்தார புத்ரி
துறைமுகத்தில் இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட ZIM
என்ற கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு
கொள்கலன் இருப்பது பற்றிய செய்தியை அடுத்து, அதற்கான விசாரணையை
விரைவுபடுத்த வேண்டும் என்று ஜாஹிட் கூறினார்.
கன்டெய்னரை நாட்டிற்குள்
அனுமதிப்பதில் கடுமையான விதிகள் இருக்கும் நிலையில்,
எப்படி அந்த் விதிகள் மீறப்பட்டன என்பதை கண்டறிய துறைமுகம் மற்றும் சுங்கத்துறை
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று, கோத்தா இஸ்கந்தர்
சட்டமன்ற உறுப்பினர் பண்டா அஹ்மட், இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன்களை துறைமுகம்
இன்னும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்களைப் பெற்றதாகக் கூறியதை
அடுத்து இவ்விவகாரம் சர்ச்சையானது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *