SST வருவாய் RM10 பில்லியன் எங்கே? முகைதீன் கேள்வி!

top-news

ஜூன் 18,


விற்பனை சேவை வரியான SST மூலமாகப் பெறப்படும் லாபமே நாட்டின் பொருளாதாரத்திற்குப் போதுமானதாக இருக்கும் என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார். தற்போது அமல்படுத்தப்படவிருக்கும் புதிய SST கொள்கையால் ஆண்டுக்குச் சுமார் RM10 பில்லியன் வருவாய் பெறும் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் இந்த RM10 பில்லியன் 2026 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் எதற்காகப் பயன்படுத்தப்படும் எனும் கேள்வியையும் Tan Sri Muhyiddin Yassin முன்வைத்துள்ளார். 

தற்போதைய வரி வருவாய் கொண்டு நாட்டின் பட்ஜெட்டைக் கட்டமைக்க முடியுமென அன்வார் தெரிவித்திருந்தார். அப்படியானால் கூடுதலாகப் பெறவிருக்கும் RM10 பில்லியன் வருவாய் எதற்காக ஒதுக்கப்படும் என்றும் 2025 பட்ஜெட்டில் SST திருத்தம் குறித்து எங்கேயும் பதிவு செய்யவில்லை எனும் போது அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கப்படாத SST வரி விரிவாக்கத்தை அரசாங்கம் அமல்படுத்துவதன் நோக்கம் என்ன எனும் கேள்வியை Tan Sri Muhyiddin Yassin எழுப்பினார். அப்படியானால் இந்த ஆண்டுக்கான வெளிநாட்டு முதலீடுகள் முழுமையாகப் பெறவில்லை. அதனால் தான் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் மக்கள் மீது சுமையைத் திணிப்பதாக Tan Sri Muhyiddin Yassin சாடினார்.


Tan Sri Muhyiddin Yassin mempersoalkan ke mana RM10 bilion hasil kutipan SST baharu akan digunakan, serta mengkritik kerajaan kerana melaksanakan pelan SST tanpa dibincang di Parlimen, didakwanya sebagai beban tambahan kepada rakyat akibat kegagalan menarik pelaburan asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *