கூலாய் இந்து ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு! விண்ணப்பிக்க வலியுறுத்தினார் Yb.Teo Nie Ching
- Thina S
- 03 Jun, 2024
கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் 18 ஆலயங்களுக்கும், அரசு சாரா இந்திய இயக்கங்களுக்கு மொத்தம் RM 97,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் Teo Nie Ching தெரிவித்தார்.
இத்தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற, அதன் விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
"கூலாய் நாடாளுமன்ற மக்களின் நல்லிண்ணக்கமும் ஒற்றுமையும் தொடர்ந்து காக்கப்படும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்குமான நிதி ஒதுக்கீடு அரசியல் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
முன்னதாக, இத்தொகுதியின் கீழ் அமைந்திருக்கும் லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் ஆலயம் ; கூலாய், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ; செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் Teo Nie Ching பங்கேற்றார்.
லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் மற்றும் கூலாய், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயங்களுக்கு ரி.ம5,000.00 நன்கொடையும், செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலயத்திற்கு ரி.ம3,000.00 நன்கொடையும் Teo Nie Ching வழங்கினார்.
"வழங்கப்பட்ட இந்த சிறப்பு நிதி, ஆலயங்களின் வருடாந்திரப் பிராத்தனைகள் சிறப்பாக நடைபெற உதவும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் ஒதுக்கீடு தொடர்பான தகவல்களுக்கும், விண்ணப்பங்களுக்கும் இத்தொகுதியின் மக்கள் சேவை மையத்தை தொடர்புக் கொள்ளலாம் என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான Teo Nie Ching தெரிவித்தார்.
கூலாய் நாடாளுமன்ற மக்களுக்கு சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்கி வருவேன் என்று தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *