ஆயர் கூனிங்கில் மும்முனைப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 12: ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN), பெரிகாத்தான் நேஷனல் (PN) மற்றும் PSM ஆகிய மூன்று கட்சிகள் மும்முனை போட்டியில் களம் காண்கின்றன.

பாரிசான் நேஷனல்  கட்சியின் சார்பில் அம்னோவின் யூஸ்ரி பக்கீரும், பெரிக்கத்தான் சார்பில் பாஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் முஹைமின் மாலேக்கும் களமிறங்கும் வேளையில், PSM கட்சி சார்பில் கே.எஸ்.பவானி களம் இறங்குகிறார். 

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், தாப்பாவில் உள்ள டேவான் மெர்டேகாவில் தேர்தல் ஆணைய (EC) தேர்தல் அதிகாரி அஹ்மத் ரெதாவுதீன் அஹ்மத் ஷோகோரி அவர்களின் வேட்புமனுவை அறிவித்தார்.

பிப்ரவரி 22 அன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருதீன் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவிய நிலையில் 2,213 வாக்குகள் பெரும்பான்மையுடன் இஷாம் அந்த இடத்தை வென்றார்.

ஆயர் கூனிங்கில் 31,897 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இதில் 31,315 வாக்காளர்கள் மற்றும் 582 காவல்துறையினர் மற்றும் அவர்களது மனைவிகள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

Ayer Kuning akan menyaksikan pertandingan tiga penjuru antara BN, PN dan PSM pada 26 April. Ia diadakan susulan kematian ADUN Isham Shahruddin. Seramai 31,897 pengundi berdaftar dijangka keluar mengundi di kawasan itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *