அம்பாங்கில் ஆசிரியரால் 11 வயது சிறுவனின் உடல் நிலை பாதிப்பு! YB Thulsi கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

அண்மையில், அம்பாங்கைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தனது ஆசிரியர் அளித்த கடுமையான தண்டனையால் நிரந்தர நரம்பு பாதிப்புக்கு ஆளான சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக BUNTONG சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் FADHLINA SIDEK உறுதியளித்தபடி முழுமையான விசாரணை வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

சிறுவனை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வற்புறுத்துவதியது முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குழந்தைகளுக்கு வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுகாதார அமைச்சும்  கல்வி அமைச்சும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும் இவ்வாறு நடந்தேறியிருப்பது, முற்றிலும் பொறுப்பற்ற செயலாகத் தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

 

இத்துயர்மிக்க தருணத்தில் சிறுவனுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் தனது வருத்தத்தை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் எந்த ஒரு குழந்தையும் இத்தகைய பாதிப்பைச் சந்திக்கக்கூடாது, குறிப்பாக, ஒரு பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்கும் கல்வி வளாகத்தில் இவ்வாறு நடந்திருக்க கூடாது. கல்வி அமைச்சு எப்போதும் மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்நிலையில், அதற்கு எதிராக செயல்பட்ட தொடர்புடைய ஆசிரியர் மீது கல்வி அமைச்சும் அமைச்சின் அதிகாரிகளும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

 

இந்த விவகாரம் குறித்து முழுமையான, நேர்மையான விசாரணையை நடத்துமாறு அமைச்சையும் அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார். ஆசிரியர்களும் நிர்வாக அதிகாரிகளும் கட்டொழுங்கு சிக்கல்களுக்கு வழங்க வேண்டிய தண்டனை  நடைமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களுடன்  முறையானப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் BUNTONG சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN  வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *