பொருத்தமற்ற பதிவுகளை அகற்றத் தவறும் சமூக தகவல் சாதனத் தளங்கள் மீது கடும் நடவடிக்கை-ஃபாமி பட்சில்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 29 -

மலேசியாவின் சமூக தகவல் சாதன தளங்கள் லைசென்ஸ் விதிமுறைகள் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், பொருத்தமற்ற பதிவுகளை அகற்றத் தவறும் சமூக தகவல் சாதனத் தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்நடவடிக்கையில் அபராதங்களும் சட்ட நடவடிக்கைகளும் அடங்கும் என்று, தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பட்சில் தெரிவித்தார்.

முதல் வாசிப்புக்காக, மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கும் இணைய பாதுகாப்பு சட்டத்தில் (ஒன்சா) இவை இடம் பெற்றிருக்கும் என்று அவர் தெரிவித்தார். 'நடப்பில் உள்ள சட்டத்தின் கீழ் எந்த ஒரு மீறலுக்கு எதிராகவும் தொடர்பு மற்றும் பல்முனை தகவல் சட்டத்தின் மூலம்தான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒன்சா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், சமூக தகவல் சாதனத் தளங்கள் அபராதங்களை அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும்.  

“அச்சட்ட மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த விவகாரம் குறித்து நான் மேலும் விவரிக்க விரும்பவில்லை என்று, கோலாலம்பூரில் நேற்று திங்கள்கிழமை, தகவல் சாதன முன்னாள் ஊழியர்களுக்கு தீபாவளி உதவியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் ஃபாமி இதனைத் தெரிவித்தார். இதனிடையே, மலேசிய தகவல் சாதன மன்ற மசோதா, அடுத்த வாரத்தில் மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *