பகடிவதைச் சம்பவங்களுக்குக் கடும் நடவடிக்கை! - மாரா தலைவர் எச்சரிக்கை
- Shan Siva
- 12 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 12- மாராவுடன் சம்பந்தப்பட்ட கல்விக்கழகங்களில் நடைபெறும் பகடிவதைச் சம்பவங்களை மூடிமறைக்க முயலும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மஜ்லிஸ் அமானா ரக்யாட் மாரா தலைவர் அஷ்ராப் வாஜ்டி டூசுக்கி நேற்று எச்சரித்தார்.
எந்தவொரு
காரணத்தின் அடிப்படையிலும் பகடிவதைச் சம்பவங்களையோ அதன் தொடாபான விவகாரங்களையோ
மூடிமறைக்க முயன்றதாக கெனக்குத் தகவல் கிடைக்குமாயின் கடும் நடவடிக்கை:
மேற்கொள்வேன். அத்தகைய தரப்பினர் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு.
துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி எனக்கு உத்தரவிட்டுள்ளார். _ என்று அவர் தெரிவித்தார்.
இளநிலை அறிவியல்
கல்லூரி (எம்ஆர்எஸ்எம்) அல்லது மாரா கல்விக்கழகம் ஆகியவற்றின்
தலைமையாசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகியோரைப் பணிநீக்கம். செய்வதும்
அந்நடவடிக்கைளில் அடங்கும் என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அஷ்ராப்
குறிப்பிட்டுள்ளார்.
ஸாஹிட்
அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிராம மற்றும் அமைச்சின்கீழ்தான் மாரா
பட்டியலிடப்பட்டுள்ளது. தேசியத்
தற்காப்புப் பல்கலைக்கழத்தில்அண்மையில் நிகழ்ந்த இரண்டு பகடிவதைச்
சம்பவங்களைச் சுட்டிக் காட்டி அஷ்ராப் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அப்பல்கலைக்கழகத்தில்
பயிற்சி மாணவர். ஒருவரை மூத்த மாணவன் ஒருவன் காலால் மிதித்ததில் 19 வயதான
அம்மாணவனின் விலா எலும்புகளிலும், முதுகுத்தண்டிலும்
முறிவுகள் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானான். அந்த பகடிவதை தொடர்பில் ஒன்பது பேரிடமிருந்து
போலீசார் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்தனர். _
அக்டோபர் 21ஆம்
தேதி இரவு 10.45மணியளவில் மைதானமொன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அக்டோபர்
22ஆம் தேதியன்று யூபிஎன்எம் பல்கலைக்கழகத்தின். தங்கும் விடுதியில் சல்மான்
சைஃபுல் சுராஷ் (வயது 20) எனும் மாணவனின் நெஞ்சுப் பகுதி மீது சூடான அயர்ன்
பெட்டியை வைத்துக் காயப்படுத்தினான். கிச்சம்பவம் தொடர்பாக அமிருல் இஸ்கண்டார்.
நோரானிஸான் (வயது 22) எனும் மாணவன் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்
சுமத்தப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *