என்னையும் விக்னேஷ் சிவனையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை- நயன்தாரா!

top-news
FREE WEBSITE AD

தனக்கு எல்லாமே விக்னேஷ் சிவன் தான் என்று தான் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் பேசிவந்த நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. மேலும் அவர்களுக்குள் அப்படி என்ன ஆகிவிட்டது என்றும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தேவையான நேரத்தில் கிளாமர் ரோல் செய்து; தேவையான நேரத்தில் தனது நடிப்பையும் வெளிப்படுத்தி தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் காரணமாக அவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

காதல் தோல்விகள்: சூழல் இப்படி இருக்க வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார். அந்தக் காதல் சில காலம் நீடித்தது. அதனையடுத்து சிங்கிளாக இருந்த அவர்; வில்லு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார். மேலும் அவருக்கு ஹிந்து மதத்துக்கும் மாறி சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் அந்தக் காதலும் சில காலம் மட்டுமே நீடித்தது. பிரபுதேவாவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு சில காலம் கழித்து மீண்டும் நடிக்க வந்தார்.

கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவனாம்.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

விக்னேஷ் சிவனுடன் திருமணம்: அந்தவகையில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். நிலவரம் இப்படி இருக்க சமீபமாக இரண்டு பேருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து நயன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நயன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்ததுண்டு. இப்போதும் நான் குற்ற உணர்ச்சியில்தான் இருக்கிறேன். ஏனெனில் அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் அவருக்கென ஒரு அடையாளம் இருந்திருக்கும்.

விக்னேஷ் சிவன் ரொம்பவே நல்ல மனிதர். அவரை போல் ஒருவர் இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால் அது எனக்கு தெரியவில்லை. ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது. தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆடம்பரத்தையோ, வெற்றியையோ நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *