நிலையான பொருளாதாரத்தை நோக்கிய விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது-டத்தோ முகமது ஃபைஸ் ஆஸ்மி!
- Muthu Kumar
- 19 Oct, 2024
கோலாலம்பூர்:
2025 பட்ஜெட் அனைத்து அளவிலான வணிகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் காட்டுகிறது என்று செக்யூரிட்டி கமிஷன் மலேசியா தெரிவித்துள்ளது.குறிப்பாக ஸ்டார்ட்அப்கள், குறு மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி மற்றும் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுத் தேர்வுகள் மற்றும் வாய்ப்புகளை ஆழமாக்கியிருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் டத்தோ முகமது ஃபைஸ் ஆஸ்மி தெரிவித்தார்.
பன்முகத்தன்மையை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள், ஓய்வூதியத் தேவைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துதல், குறிப்பாக தனியார் ஓய்வூதியத் திட்டங்களுக்கான வரி விலக்கு நீட்டிப்பு மற்றும் கார்பன் வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை நோக்கிய படிகள் ஆகியவற்றால ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *