STEM துறைகளில் பெண்களை ஆதரிப்பது எதிர்காலத்திற்கான முதலீடு! - தியோ நி சிங்
- Shan Siva
- 15 Aug, 2024
கோலாலம்பூர்: ஆண் மற்றும் பெண்
பணியாளர்களின் பங்கேற்புக்கு இடையேயான இடைவெளி குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று
தகவல் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பெண் பணியாளர்களின்
எண்ணிக்கை 51.6 சதவீதமாகவும், ஆண்களின் எண்ணிக்கை 78 சதவீதமாகவும் உள்ளது என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்
தெரிவித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில்
பெண்களை ஆதரிப்பது மிக அவசியம் என அவர் கூறினார், இது சமத்துவத்தைப் பற்றியது மட்டுமல்ல, புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் சக்தி என அவர் கூறினார்.
பெண்கள் STEM கல்வி மற்றும் தொழில்களைத் தொடர ஊக்குவிப்பது நமது நாட்டின்
எதிர்காலத்திற்கான முதலீடாகும் என்று இன்று பெண்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) மன்றத்தின் தொடக்க நிகழ்வில் செய்தியாளர் கூட்டத்தில் தியோ இதனைத்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *