அனைத்துலகச் சொற்போர்! - UPSI வளர்தமிழ் மன்றம்!

top-news

UPSI பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக அளவில் வளர்தமிழ்ச் சொற்போர் இரண்டாம் முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 1 முதல் ஜூன் 2 வரையில் இயங்கலையில் இப்போட்டி நடைபெற்றதாகவும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து 17 அணிகள் பங்கேற்றதாக வளர்த்தமிழ்ச் சொற்போரின் இயக்குநர்  செல்வி மேகலாவதி கங்காதரன் தெரிவித்தார். 

இப்போட்டியின் ஆலோசகராக உப்சி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா, முனைவர் இளங்குமரன் சிவநாதன் சிறப்பாகப் போட்டியை வழிநடத்தினர். அவர்களுடன் 23 நடுவர்களும் இச்சொற்போரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக வளர்த்தமிழ்ச் சொற்போரின் இயக்குநர்  செல்வி மேகலாவதி கங்காதரன் தெரிவித்தார்.

இப்போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெற்ற குழுவிற்கு  RM2,000 வெள்ளியும்.இரண்டாம் நிலையில்  வெற்றிப் பெற்ற குழுவிற்கு  RM1,500 வெள்ளியும் , மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்ற குழுவிற்கு RM 1,000 வெள்ளியும் சிறந்த பேச்சாளருக்கு, RM500 வெள்ளியும்  பரிசுத்தொகையாக  வழங்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *