உயர்கல்வியைத் தொடரும் 150,557 மாணவர்கள்! இன்று முதல் மேல்முறையீடு செய்யலாம்!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜூன் 16,
2024 SPM தேர்வு எழுதியவர்களில் 150,557 மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவிருப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது. UPUOnline மூலமாக 223,624 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் அதில் 67.33% விழுக்காட்டினர்கள் உயர்கல்வியைத் தொடர தகுதிப்பெற்றிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 86,589 மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களிலும் 42,058 மாணவர்கள் போலிடெக்னிக்கிலும் 20,427 மாணவர்கள் Kolej Komuniti எனும் சமூகக் கலைகூடங்களிலும் 1,483 மாணவர்கள் மாரா தொழில்துறையிலும் உயர்கல்வியைத் தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்கல்விக் கூடங்களுக்கான தேர்வுகள் முறையான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் 2024 SPM தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும் கல்வி புறப்பாட நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது. UPUOnline மூலமாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் இன்று 16 ஜூன் 2025 நண்பகல் 12 மணி முதல் 25 ஜூன் மாலை 5 மணிவரையில் 10 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யும்படியும் உயர்கல்வி அமைச்சு வலியுறுத்தியது.
Sebanyak 150,557 calon SPM 2024 berjaya melanjutkan pengajian tinggi melalui UPUOnline. Pelajar yang gagal mendapat tempat boleh mengemukakan rayuan mulai 16 hingga 25 Jun 2025. Penempatan dibuat berdasarkan keputusan akademik dan kokurikulum, kata Kementerian Pengajian Tinggi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *