இந்த ஆண்டு MACC கைது செய்யப்பட்டுள்ள 1,257 பேரில், 545 பேர் அரசு ஊழியர்கள்!
- Muthu Kumar
- 10 Nov, 2024
கெனிங்காவ் (சபா), நவ. 10 -
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ள 1,257 பேரில், 545 பேர் அரசு ஊழியர்கள்.இந்த 545 பேரில் ஒன்பது பேர் மூத்த நிர்வாகப் பிரிவுகளையும் 181 பேர் தொழில் நிபுணத்துவ நிர்வாகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள். எஞ்சிய 357 பேர் அதிகாரிகள் என்று, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களைத் தவிர்த்து, கைது செய்யப்பட்டுள்ள எஞ்சியவர்களில் 712 பேர் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள்” என்று, சபா, கெனிங்காவில் உள்ள பெடரல் ஹவுஸ்சில் நேற்று சனிக்கிழமை, கெனிங்காவ் எம்ஏசிசி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அரசு ஊழியர்கள் ஈடுபட்ட குற்றச் செயல்களில் லஞ்ச ஊழல், போலி பணக் கோரிக்கையை சமர்ப்பித்தது, அதிகார துஸ்பிரயோகம் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் ஆகியவையும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுமையிலும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக இருப்பதாகக் கூறிய அஸாம், கைது செய்யப்படும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக அவர்களின் எண்ணிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் சம்பவங்கள் குறைந்திருப்பதாக நாம் கூற விரும்பினால், அது 40 விழுக்காட்டுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்த விழுக்காடு ஆண்டு தோறும் குறைந்தும் வரவேண்டும்” என்று அஸாம் தெரிவித்தார்.கெனிங்காவ் எம்ஏசிசி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைக் குறிப்பிட்ட அவர், உள்ளூர்வாசிகள் சுலபமாக தங்களின் புகார்களை அங்கு அளிக்க முடியும் என்பதுடன் உதவியையும் நாடலாம் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *