கூச்சலிட்ட பாலஸ்தீனிய பெண் மன்னிப்புக் கோரினார்!
- Thina S
- 06 Oct, 2024
Wisma Transit Kuala Lumpur பாதுகாப்பு
மையத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களில் ஒருவரானப் பெண் கூச்சலிட்டு
மலேசியா ஒழிக என தெரிவித்தது உள்ளூர் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தன் தவற்றை
உணர்ந்த அவர் தன்னுடைய செயலுக்காக மன்னிப்புக் கோரி, காணொலியை
வெளியிட்டுள்ளார்.
போரில் பாதிக்கப்பட்ட எங்களை அரவணைத்த மலேசியாவை அவமானப்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டதை எண்ணி தாம் வருந்துவதாகவும் அவரின் இம்மாதிரியானச் செயலுக்குப் பின் சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தாம் இங்கே இருந்தாலும், தன்னுடைய மகன் பாலஸ்தீனத்தில் இருப்பதால் அவர் குறித்தான எந்தவொரு விவரமும் அறிய முடியாததால் தாம் இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் என் மகனைப் பற்றிய கவலையால் மன அழுத்தத்தில் அவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் Aminah Muhammad Nafi Jamal Abd Rabah எனும் அப்பெண் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினார்.
Aminah Muhammad Nafi Jamal Abd Rabah, wanita
Palestin yang terlibat dalam insiden di Wisma Transit Kuala Lumpur, mohon maaf
atas tindakannya akibat tekanan memikirkan keadaan anaknya di Gaza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *