மாமன்னர் தம்பதியருக்கு விருது! - அன்வார் வழங்கினார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு இன்று மலேசிய அரசால் Darjah Yang Maha Utama Kerabat Diraja Malaysia' (D.K.M) எனும் பட்டம் வழங்கப்பட்டது.

D.K.M என்பது 'Most Excellent Order of the Royal Family of Malaysia' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மலேசியாவின் மாமன்னருக்கு என நியமிக்கப்பட்ட மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படும் மலேசிய கூட்டாட்சி விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இப்பட்டத்தை வழங்கினார்.

பேரரசியார் ராஜா சாரித் சோபியாவுக்கு Darjah Utama Seri Mahkota Negara (D.M.N), அல்லது 'தி மோஸ்ட் எக்ஸால்டட் ஆர்டர் ஆஃப் தி கிரவுன் ஆஃப் தி ரீம்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *