பிச்சை எடுத்த வெளிநாட்டினர்கள் கைது! BUKIT BINTANG
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
அக்தோபர் 19,
தலைநகர் BUKIT BINTANG வணிகச் சந்தையில் இசை கச்சேரியுடன் பிச்சை எடுக்கும் இரு வெளிநாட்டினரைக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார். Maghribi நாட்டைச் சேர்ந்த இருவரும் சுற்றுலா பயணிகளாக மலேசியாவுக்கு வந்து சாலை ஓரங்களில் இசைக்கருவிகளை வாசித்து ஒரு நாளுக்கு RM 200 ரிங்கிட் வரையில் சம்பாதித்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சுற்றுலாவுக்குக் கொண்டு வந்த பணம் காலியானதால் இவ்வாறு செய்ததாக 30 வயதுடைய இரு Maghribi நாட்டினரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து மேல் விசாரணை நடத்தி வருவதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
Dua lelaki warga Maghribi ditahan di Bukit Bintang kerana
mengemis dengan bermain gendang untuk menyara kehidupan. Mereka menyalahgunakan
pas lawatan sosial, mengumpul hingga RM200 sehari, dan kini disiasat
oleh Imigresen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *