காஜாங்கில் பெண் ஒருவர் கொலை! 5 மியன்மார் பிரஜைகள் கைது!
- Shan Siva
- 07 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 7: பண்டார் டெக்னாலஜி காஜாங் தொழிற்பேட்டையில் வாடகை அறையில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பான, விசாரணை தொடர்பாக ஐந்து மியன்மார் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 முதல் 45 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் உட்பட அனைத்து
சந்தேக நபர்களும் நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பண்டார் டெக்னாலஜி மற்றும் செமினி
ஆகிய பகுதிகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர்
ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சோதனையின் போது,
சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து கத்தி
மற்றும் ஆடைகளை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
பெண்ணின் சடலம்
கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அறிக்கை அதிகாலை 1.09 மணியளவில் 52 வயதான உள்ளூர் ஆடவரிடமிருந்து ஓர் அழைப்பின் மூலம் பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட
அவர், 40 வயதான பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் தங்களுக்குத்
தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
சம்பவ இடத்தில்
போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட நபர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் முழுவதும் 12 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக நேற்று ஓர் அறிக்கையில் நஸ்ரோன் கூறினார்.
இந்நிலையில், செர்டாங் மருத்துவமனையின் நோயியல் நிபுணர் நடத்திய பிரேதப்
பரிசோதனையில், பாதிக்கப்பட்டவருக்கு
அடிவயிற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதை உறுதிசெய்தது.
இந்தச்
சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் பொறாமை என்று நம்பப்படுகிறது. அனைத்து
சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்,
”என்று அவர் கூறினார். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும்
கூறினார்.
வழக்கு தொடர்பாக
ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது வழக்கு விசாரணை
அதிகாரி ஏஎஸ்பி முகமது ஹபீஸ் ஹம்சாவையோ 019-6556536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்
கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *